வட மாகாண பொலிஸாருக்கு ஊடகவியலாளர்களாகிய சமூக வீரர்களின் ஒத்துழைப்பு அவசியமானது என வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜயகுணவர்த்தன இன்றைய தினம்(27) காங்கேசந்துறை சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தில் வடக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதிப் பொலீஸ் மா அதிபராக உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தனது கருத்தில் ஊடகவியலாளர் ஒத்துழைப்புடனே சமூக சீர்கேடுகள் போதைப்பொருள் பாவனைகள் போன்றவற்றை இல்லாமல் ஒழிப்பதோடு பொலிஸாருக்கு தமது கடமையில் பூரண சுதந்திரத்துடன் உண்மையாக செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.
இப்பதவியேற்பு வைபவத்தில் வடக்கு மாகாணத்திலுள்ள மன்னார் கிளிநொச்சி முல்லைதீவு வவுனியா யாழ்ப்பாணம் உள்ளிட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பிரதிப்பொலிஸ் மா அதிபர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சர்வ மத குருமாரின் ஆசிர்வாதத்துடன் குறித்த பதவியேற்பு வைபவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.