முகநூலின் பரிணாம வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு உருவாக்கம் பெற்ற வியூகம் தொலைக்காட்சி மற்றும் வியூகம் செய்திகளை கொண்ட வியூகம் ஊடக வலையமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று சாய்ந்தமருது பெர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் "சமூக நல்லிணக்கமும் ஊடகங்களின் பங்களிப்பும்" எனும் தலைப்பில் வியூகம் ஊடக வலையமைப்பின் தலைவரும் ஒலிபரப்பாளருமான, படைப்பாளி எஸ்.ஜனூஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இஸ்லாமிய,கிறிஸ்தவ மத போதகர்கள் , மக்கள் பிரதிநிதிகள்,பிராந்திய அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள் வர்த்தகர்கள், வியூகம் ஊடக வலையமைப்பின் நிருபர்கள், அறிவிப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் அண்மைய அசாதாரண சூழ்நிலையில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கான மௌனமான பிராத்தனைகள் இடம்பெற்றது தொடர்ந்து "சமூக நல்லிணக்கமும் ஊடகங்களின் பங்களிப்பும்" எனும் தலைப்பில் சிரேஷ்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பல்கலைக்கழக விரிவுரையாளர் பொறியலாளர் அஸ்லம் சஜாவினால் சமகால ஊடக போக்குகள், ஊடக நடவடிக்கைகள் தொடர்பிலான ஆய்வு உரை இடம்பெற்றது. ரமலான் சிந்தனையை ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரி மௌலவி இசட்.எம். நதீர் அவர்கள் நிகழ்த்தினார்.