இரண்டாவது குழந்தை பிறக்கவில்லை -டாக்டர் ஷாபி க்கு எதிராக இரண்டு இளம்பெண்கள் முறைப்பாடு

ந்தேகத்துக்கிடமான முறையில் சொத்து சேகரித்தமைத் தொடர்பில், கைதுசெய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின், வைத்தியர் செய்கு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக, பெண்கள் இருவர் முறைபாடு செய்துள்ளனர்.

வைத்தியசாலையின் நிறைவேற்றதிகாரியிடம் இன்றைய தினம் இந்த முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

வாரியபொல, குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 32, 29 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு முறைபாடு செய்துள்ளனர்.

திருமணமாகி குறுகிய கால இடைவெளியில் தாம் கருவுற்று முதலாவது குழந்தையை குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிசேரியன் மூலம் பிரசவித்த பின்னர் தமக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவில்லை என்றும் குறித்தப் பெண்கள் தமது முறைபாட்டின் மூலம் தெரிவித்துள்ளனர்.

இவர்களது முறைபாட்டை பதிவு செய்த வைத்தியசாலை நிர்வாகம், இவர்களுக்கு குடும்ப கட்டுபாடு செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இப்பெண்களின் விருப்பத்துடன் நாளைய தினம் சோதனை செய்யவுள்ளதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெதன்கமுவ தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -