ஊடகவியலாளர்களின் தொழில் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள 2019 - மாத்ய அருண என்ற விஷேட கடன் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை இம்மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இந்த கடன் திட்டத்தின் கீழ் கடனை பெறும் ஊடகவியலாளர்கள் முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன் அல்லது அதற்கு முன்னதாக கிடைக்கக்கூடியதாக அனுப்பிவைக்கவேண்டும். விண்ணப்பங்கள் பணிப்பாளர் ஊடகம் வெகுஜன ஊடகத்துறை அமைச்சு எஸிதிஸி மெதுர இலக்கம் 163 கிருளப்பனை மாவத்தை பொல்ஹேன்கொட கொழும்பு 5 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டும்.
இது தொடர்பான விபரம் மற்றும் விண்ணப்பத்தை
www.media.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் அல்லது 0112513459 / 0112513460 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -