முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதத்திற்கு இந்து மஹாசபா கண்டனம்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

ந்த நாட்டிலே கடந்த 21 திகதி நடைபெற்ற துயரமான சம்பத்தினை ஒட்டுமொத்த உலகமுமே கண்டித்திருந்தது. அந்த சம்பவத்த்னை தொடர்ந்து நாட்டின் சில பிரதேசங்களில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த சம்பவத்தினை இந்து குருமார் என்ற வகையில் அகல இலங்கை இந்து மஹா சபா தலைவர் சிவஸ்ரீ சுரேஸ்வர சர்மா தெரிவித்தார்.
நேற்று (15) மாலை கொட்டகலை கொமர்சல் இந்து மஹா சபை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடாக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கடந்த 21 திகதி நடைபெற்ற சம்பவமானது முஸ்லிம் குழுவினால் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தினை தொடர்ந்து ஒட்டு மொத்த முஸ்லிகளும் இதற்கு ஆதவானவர்கள் அல்ல. 

ஆகவே அவர்களின் சொத்துக்களை சேதப்படுத்துவது அவர்களை துன்பப்படுத்துவது நியாயமானதல்ல. இந்த சம்பவத்தின் பின் நடைபபெற்ற சம்பவங்களை உற்று நோக்கும் போது இதில் எதிர்கால அரசியல் சூல்ச்சிக்காக கட்டவில்த்துப்விடப்பட்ட சம்பவகாளாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளன.

இது தொடர்பிலே மஹா நாயக்க தேர்கள் உட்பட கிருஸ்த்தவ குருமார்கள் அனைவரும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.மினுவங்கொடையில் தமது ஜீவனதாரமாக கொண்ட சொத்துக்களை நாசமாக்கப்பட்டிருப்பது சரியானதல்ல அரசாங்கம் இன்று பாதுகாப்பு தொடர்பில் முப்படைகளுக்கும் அதிகாரங்களை வழங்கியுள்ளது. முப்படையினர் இனவாதம் தூண்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.அதே நேரம் இந்த சம்பவத்துடன் தொடர்பட்ட குழுவினரை எவ்வித அரசியல் பாராபட்சமும் இன்றி கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என அகில இலங்கை இந்து மஹா சபா கேட்டுக்கொள்கிறது.

அதே நேரம் பாதுகாப்பு தொடர்பாக சகல மதங்களை உள்ளடக்கிய வகையில் ஒரு தேசிய கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டும் தற்போது நடைபெறுகின்ற பாதுகாப்பு தொடர்பான கூட்டங்கள் கொழும்பை மையப்டுத்தி கொழும்பிலுள்ள மதத்தலைவர்களை மாத்திரம் உள்ளடக்கியதாக இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. 

அது அவ்வாறு அன்று நாட்டின் ஏனைய பகுதிகளை உள்ளடக்கியதாக பாதுகாப்பு நடவடிக்கைகள் அமைய வேண்டும.; நடைபெற்ற சம்பவங்களில் இந்து மதத்திலே இருந்து மதம்மாறிவர்கள் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது எங்களுக்கு மிகவும் வேதனையளிகிறது.

இந்து மதம் அனைத்து உயிர்கள் மீதும் கருணை கொள்ள வேண்டும் என்றே பொதித்துள்ளன. ஆகவே மதம் மாற நினைப்பவர்கள் மற்றும் மாறியவர்கள் எமது மதத்தில் உள்ள நன்மைகளை புரிந்து கொண்டு செயப்பட வேண்டும் என்று அதே நேரம் தேசிய ரீதியான நிகழ்ச்சிகயின் போது இந்து மதம் தொடர்பாக முக்கயத்துவம் அளிப்பது மிகவும் குறைவாகவே உள்ளன. 

இதனை நிவர்த்தி செய்வதற்கு பொறுப்பு வாய்ந்த ஊடகங்கள் முக்கியதுவம் அளிக்கப்பட வேண்டும். என மிகவும் தயவாக வேண்டிக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -