சீகிரியாவை இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம்..

சீகிரியா தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக வளவை இம்மாதம் 18ஆம் 19ஆம் 20ஆம் திகதிகளில் உள்ளுர் சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக பார்வை இடுவதற்கான வசதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய கலாச்சார நிதியம் தெரிவித்துள்ளது.

வெசாக் நோன்மதித் தினம் மற்றும் தேசிய தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக தினத்துக்கு அமைவாக இந்த ஏற்பாடு செய்யப்படுள்ளது.

சீகிரியா பகுதிக்கு செல்லும் பொழுது காணப்படும் தொல்பொருள் கண்காட்சி மற்றும் கல்வி வேலைத்திட்டங்கள் பல இந்த 3 நாட்களிலும் மேற்கொள்ளப்படுவதாக கலாச்சார நிதியத்தின் சீகிரியா திட்ட முகாமையாளர் மேஜர் அநுர நிசாந்த தெரிவித்துள்ளார்.

சீகிரியாவின் தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக வளவுக்கான பாதுகாப்புக்கு இராணுவம் ஈடுபடுத்தப்படும் என்றும் சீகிரியா திட்ட முகாமையாளர் தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -