வடமேல் மாகாண வன்முறை - 78 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்


டமேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு இன்று காலை 4 மணியளவில் நீக்கப்பட்டது. அமைதியை பாதுகாப்பதற்காக நேற்று இரவு 7 மணி தொடக்கம் இந்த பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சில தினங்களுக்கு முன்னர் வடமேல் மாகாணத்தில் வன்முறைச் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட 78 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்இ பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவர்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு அறிவித்து ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கான தகவல்கள் வழங்கப்படுமென அவர் கூறினார்.
தற்போதுள்ள வீடியோ காட்சிகளைப் பயன்படுத்தி ஏனையவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வடமேல் மாகாணத்தில் சமாதானத்தைப் பேணும் பொருட்டு 5 ஆயிரத்து 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரும் இதற்கு ஆதரவளித்து வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -