வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களின் பொது மன்னிப்பு வழங்கலின் கீழ் 762 சிறைக்கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (18) முற்பகல் வெலிக்கடை சிறைச்சாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
விடுதலை பெறும் 05 கைதிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் சுய தொழிலுக்கான உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
சிறைக்கைதிகள் மற்றும் நிகழ்ச்சியில் பங்குபற்றியவர்களுக்கு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பௌத்த சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெசாக் அன்னதான நிகழ்வை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அவர்கள், இன்றைய தினம் விடுதலை பெற்ற சிறைக்கைதிகளுக்கான விருந்துபசார நிகழ்விலும் கலந்துகொண்டார்.