நாயைக் காப்பாத்தச் சென்று பலத்த காயங்களுக்கு உள்ளான இரண்டு தொழிலாளர்கள்நோட்டன் பிரிட்ஜ்  எம் கிருஸ்ணா-

சிறுத்தையின் பிடியிலிிருந்து நாயை மீட்க முற்பட்ட போது சிறுத்தைையின் தாக்குதலுக்கு இழக்காகிய இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலா சீனாகலை டி.பி கீழ் பிரிவில் 26 ஆம் திகதி மதியம் 12.30 மணியளவில் தொழில் புரிந்து கொண்டிருந்த பாக்கியராஜா ஆனந்த, சக்திவேல் ஆறுமுகம் ஆகியோரே சிறுத்தை தாக்கிய நிலையில் கண்டி மற்றும் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

குறித்த தேயிலை மலையில் தொழில்புரிந்து கொண்டிருந்து தொழிலாளர் ஒருவரின்
வளர்ப்பு நாய் ஒன்றினை குறித்த சிறுத்தை தாக்கி கொண்டிருந்த வேலை
குறித்த நாயினை இரண்டு தொழிலாளர்களும் காப்பாற்ற முயற்சித்த போது கோபம்
அடைந்த சிறுத்தை இரண்டு ஆண் தொழிலாளர்களை தாக்கியுள்ளது ஒருவருக்கு
முகம் மற்றும் உடம்பு பகுதியிலும் மற்றுமொரு தொழிலாளர்க்கு உடம்பு
மற்றும் கால் கை பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

பலத்த காயங்களுக்கு உள்ளான இரண்டு தொழிலாளர்களும் பொகவந்தலாவ
வைத்தியசாலையில் இருந்து டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டு மேலதிக சிகிிச்சைக்காக ஒருவர் நாலவப்பிிட்டி மற்றொருவர் கண்டி மாவட்ட
வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி
ஒருவர் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -