கொழும்பில் இடம்பெற்ற குண்டுதாக்குதலில் பலியான முஸ்லிம் இளைஞனின் நல்லடக்கம் வவுனியாவில்!

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் வவுனியா – வேப்பங்குளம் நான்காம் ஒழுங்கைச் சேர்ந்த 21 வயதுடைய முகமட் நிஸ்தார் நலீர் என்ற இளைஞன் உயிரிழந்தார்.

உயிரிழந்த குறித்த இளைஞனின் நல்லடக்கம் இன்று (22.04.2019) நடைபெற்றது.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா , வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா கலந்து கொண்டு உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினருக்கு அரசாங்க இழப்பிடான ஒரு லட்சம் ரூபாவினை வழங்கி வைத்தனர்.
குறித்த இளைஞனின் நல்லடக்க நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் , முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியூதின் , வவுனியா நகரசபை உபநகரபிதா சு.குமாரசாமி , பொலிஸார் , கிராமசேவையாளர் , இளைஞர்கள் , பொதுமக்கள் , வர்த்தகர்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -