சில மத்ரஸாக்கள் அடிப்படைவாதத்தைப் போதிக்கின்றன -சந்திரிக்கா

முஸ்லிம் சமூகத்திலுள்ள சில மத்ரஸாக்களில் தனியா அடிப்படைவாதம் கற்பித்துக் கொடுக்கப்படுவதாகவும், இவை தொடர்பில் இந்த அரசாங்கம் மாத்திரமல்ல, முன்னர் உள்ள அத்தனை அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

கல்வி அமைச்சு இது தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை. நாட்டில் கற்பித்துக் கொடுக்கும் நிறுவனம் ஏதாவது இருக்குமாக இருந்தால், அதில் என்ன கற்பித்துக் கொடுக்கப்படுகின்றது, அதன் பாடவிதானங்கள் என்ன என்பதைத் தேடிப் பார்க்க வேண்டிய பொறுப்பு கல்வி அமைச்சுக்கே உள்ளது. இவ்வாறு கண்காணிப்பு நடவடிக்கைகளை இந்த அரசாங்கமும், இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களும் செய்யவில்லை.

இதேவேளை, சில மத்ரஸாக்கள் முஸ்லிம் பள்ளிகளுடன் இணைந்து அரபுப் பாடம், இஸ்லாம் பாடம் என்பனவற்றைப் போதிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கின்றன. இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால், தனிப்பட்ட முறையில் நான் அறிந்து வைத்துள்ளேன். சில மத்ரஸாக்கள் அடிப்படைவாதத்தை போதிக்கின்றன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -