மாவட்டத்தின் பாதுகாப்பினையும் மக்களின் இயல்வு வாழ்க்கையையும் உறுதிப்படுத்தவும்

 இராஜாங்க அமைச்சர்ஹரீஸ் பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள்.

றியாத் ஏ. மஜீத்-
சாய்ந்தமருது, கல்முனை மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட மாவட்டத்தின் பாதுகாப்பினையும் மக்களின் இயல்வுவாழ்க்கையையும் உறுதிப்படுத்துமாறு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சாய்ந்தமருது வெலிவோரியன் வீட்டுத்திட்ட பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூடு மற்றும் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பிரதேசத்திலுள்ள மக்கள் பாதுகாப்பாக எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில்தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்களிடம் பொலிஸார் நேற்றைய சம்பவம் பற்றி விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த உள்ளுராட்சி மற்றும் மாகாண இராஜங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்,பொதுமக்களிடம் நலன்களை விசாரித்ததுடன் தனது ஆறுதலை தெரிவித்த அவர் மக்களுக்கான அடிப்படைத்தேவைகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தார். இதன்போதே மேற்படி வேண்டுகோளினை இராஜாங்க அமைச்சர்ஹரீஸ் பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம் விடுத்தார்.
மேலும் குண்டுத் தாக்குதலில் அச்சமடைந்துள்ள பொதுமக்களினதும் பிரதேசத்தினதும் பாதுகாப்பைஉறுதிப்படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுதத்துடன் மக்களின் இயல்வு வாழ்வை உறுதிப்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதன்போது சம்பவ இடத்திற்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் உள்ளிட்ட கல்முனைமாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.அசீம், ஏ.றபீக், ஏ.எம்.பஸ்மீர், எம்.ஜஃபர் ஆகியோரும் விஜயம் செய்து அச்சமடைந்துள்ள பொதுமக்களுக்கு ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் குறித்துகேட்டறிந்து அதற்காக ஒழுங்குகளையும் செய்து கொடுத்தனர்.
இதில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத்தவைருமான எம்.ஐ.எம்.மன்சூர், கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றக்கீப் ஆகியோரும் இணைந்திருந்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -