சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டிக்கான 'சித்திரை புதுவருட உறுதியுரை நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் பிரதேச சபையின் இன்று இடம்பெற்றது.
தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு உத்தியோகத்தர்களினால் போதைப்பொருளிக்கு எதிராக செயற்படுவோம் என உறுதியுரை செய்யப்பட்டதுடன், செயலாளரின் விசேட உரையும் இடம்பெற்றது.
இதில் உள்ளுராட்சி உதவியாளர் எஸ். கருணாகரன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.ஐ.இஸ்ஸடீன், நிதி உதவியாளர் வை.வீ கதிசா உம்மா, உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.