வரலாற்று சாதனை படைத்த மாணவன் ஹம்திக்கு பாராட்டு..

நிஸா மருதமுனை-

து வீரத்திடல் அல்-ஹிதாயா மஹா வித்தியாலத்தில் சாதாரண தரத்தில்
திறமைச் சித்தி பெற்று வரலாற்று சாதனை படைத்த ஏ.ஜே.முஹம்மது ஹம்தி எனும் மாணவனை கௌரவிக்கும் முகமாக, பொன்னாடை போர்த்தி, பதக்கம் அணிவித்து, நினைவுச்சின்னமும் வழங்கி வைத்ததுடன் உயர்தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு அல்-குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை மனித நேய நற்பணி மன்றத்தினால் கடந்த வியாழன்(18) அன்று பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மனிதநேய நற்பணி மன்றத்தின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று பணிப்பாளருமான இர்சாத் ஏ காதர், மனிதநேய நற்பணி மன்ற செயலாளரும் சம்மாந்துறை வலையக்கல்வி பணிப்பாளருமான அ.முஸ்தக் அலி, நற்பணி மன்றத்தின் சமூகவலுவூட்டல் கலாசார சமய விவகார பிரிவின் ஆலோசகரும் சம்மாந்துறை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவருமான அல்ஹாஜ் மௌலவி எம்.ஆர்.அஹமட் ஜலீல் (ஹாமி) , நற்பணி மன்றத்தின் நிதிச் செயலாளர் எஸ்.நைசர் ஆசிரியர், பாடசாலை அதிபர் எம்.எல்.பதியுதீன் ,மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -