கொழுப்பு மூன்றாம் குறுக்தெருவிற்கு அண்மித்த பிரதான வீதியில் மலிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் ஒன்று திடீரென தீப்பற்றிக் கொண்டதன் காரணமாக மேல்மாடியில் அமைந்திருந்த கடை முற்றாக எரிந்து நாசமானதுடன் கீழ்ப்பகுதியில் உள்ள கடைகளும் சேதத்திற்குள்ளானது.
இன்று மாலை (03) 6.00 மணியளவில் குறித்த வர்த்தக நிலையத்தில் தீ ஏற்பட்டுள்ளது. பின்னர் அது பாரிய தீச்சுவாலையுடன் எரியத் தொடங்கியது. உடநடியாக பொலிஸாருக்கும், தீயணைப்புப்படையினருக்கும் மக்கள் தகவல்களை வழங்கியுள்ளனர். உடநடியாக ஸ்தளத்திற்கு வந்த தீயணைப்புடையினர் கடுமையான முயற்சியின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைப்புப் படையினருடன் பொதுமக்களும் இணைந்து உதவிகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது அருகில் உள்ள ஏனைய சில கடைகளும் சேதத்திற்கு உள்ளானதுடன் அக்கடைகளுக்குள் பாரிய புகை மண்டலமும் காணப்பட்டது. எனினும் எவருக்கும் உயிர்ச்சேதமோ அல்லது காயங்களோ ஏற்பட வில்லை. உடநடியாக தீ ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டயறிய முடியாத நிலையில் பெற்றா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த தீ விபத்துக் காரணமாக பிரதான வீதியூடான பாதையில் சில மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டதுடன் மக்களிடையே பதற்ற நிலைமைகளும் காணப்பட்டன எனினும் பொலிஸார் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.