காத்தான்குடி தள வைத்தியசாலைக்கான மின்தூக்கி (Lift) ஒன்றினுடைய தேவை மிக நீண்ட காலமாக இருந்த போதிலும் அதனை நிவர்த்திப்பதற்கான சந்தர்ப்பம் கடந்த காலத்தில் கிடைக்காமல் போயிருந்தது.
காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரண்டாம் மாடியில் சத்திர சிகிச்சை கூடமும் அதற்கான விடுதியும் இருப்பதனால் இதனுடைய தேவைப்பாடு வெகுவாக உணரப்பட்டது.
இதனடிப்படையில் சுகாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ. பைசல் காசிம் அவர்களிடம் இவ்விடயம் தொடர்பில் முன்வைக்கப்பட்டு அதனை அமைப்பதற்கான அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளது என பொறியியலாளர் சிப்லி பாறுக் தெரிவித்தார்.
மேலும் இதற்கான மதிப்பீட்டை பெற்றுக் கொள்வதற்காக அண்மையில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தற்போதய காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும் சிபா போண்டேசன் நிறுவனத்தின் தலைவருமான பொறியியலாளர் சிப்லி பாறுக் காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர், கட்டடத்திணைக்கள பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் அடங்கலாக குழுவினர் மின்தூக்கி அமையப்பெற வேண்டிய இடம் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.