ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைப்பு.
கிழக்கு மாகாணத்தில் உல்லாச பயணத்துறையினை ஊக்குவிக்கும் நோக்கில் மட்டக்களப்பு குமைசன்ஸ் குழுவின் ஆதரவுடன் பாசிக்குடா மாலு மாலு விடுதி ஏற்பாடு செய்த விசேட சுற்றுலா மேம்படுத்தும் வேலைத்திட்டத்திற்கமைவாக பிரான்ஸ் நாட்டிலிருந்து இருநூருக்கு மேற்பட்ட உயர்நிலை பதவி வகிக்கும் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், மற்றும் கணக்காளர்கள் பங்கேற்ற நாற்பத்து ஏழு கிலோ மீட்டர்கள் பயணிக்கும் சைக்கில் ஓட்டம் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு தொப்பிகளை புலிபாஞ்சகல் பகுதியில் ஆரம்பமான இவ் சைக்கில் ஓட்டத்தினை கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ் பங்கேற்று கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ள இவர்கள் ஒரு வாரகாலம் தங்கியிருந்து பல்வேறுபட்ட நிகழ்வுகளில் ஈடுபடுவதன் ஊடாக கிழக்கு மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் உல்லாச பயணத்துறையினைப்பற்றி ஐரோப்பிய நாடுகளில் இவற்றை அறிமுகம் செய்வதற்காகவே இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
இதனைத்தொடர்ந்து இக் குழுவினர் இரண்டு நாட்கள் வெபர் மைதானத்தில் இடம் பெறும் கிரிக்கட் சுற்றுப்போட்டியில்
கலந்து கொள்ளவுள்ளதுடன் பாசிக்குடா கடற்கரையில் நடைபெற்ற ஓட்டப் போட்டி மற்றும் மரதன் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இதனூடாக கிழக்கு மாகாணத்திலே உள்ள உள்ளாசப்பயணத்துறை இயற்கை தொடர்பாக ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்வதன் ஊடாக கிழக்கு மாகாணத்தை முன்னேற்றுவதே இதன் வேலைத்திட்டமாகும்.