இது கடற்றொழில் துறையின் கடைசி எதிர்கால இலக்கு என்றும் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி தெரிவித்தார்.
சார்க் வலய நாடுகளின் நீர் வாழ் உயிரின மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்றைய தினம் (26) ஆரம்பமான இந்த மாநாடு இரு தினங்களுக்கு நடைபெறும். சார்க் வலயத்தில் உள்ள நாடுகளின் நீர்வாழ் உயிரினங்களுடன் சம்பந்தப்பட்ட முக்கியஸ்தர்களுடன் நடைபெறும் இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் உரையாற்றும் போது, மீன் பிடிக் கைத்தொழிலின் எதிர்காலம் மற்றும் வெளிநாட்டு பரிமாற்றத்தை இலக்காகக் கொண்டு உலகில் அதிக கேள்வி கொண்ட மீன் வளர்ப்பினை இலங்கையின் மீன்பிடித் தொழில் புரிவோருக்கு வாய்ப்பினை வழங்குவதற்கு தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
அதன் மூலம் கடலில் மீன் வளர்ப்பினை ஆரம்பிப்பதற்கு நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை தற்போது நடவடிக்கை எடுத்து வருவதுடன், அதற்கு சாதகமான பெறுபேறுகள் கிடைத்து வருவதாகவும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அவர்கள், கடல் மீன்களை கரையில் வளர்க்கும் பணிகளும் நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை மூலம் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த கடல் மற்றும் கரையில் மீன் வளர்த்தல் சம்பந்தமாக இப்போதும் முதலீட்டாளர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்த இராஜாங்க அமைச்சு மீன் வளர்ப்புத் துறையில் முதலிட, வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் வரவேற்பதாகவும், இந்த வளர்ப்புத் துறையில் சார்க் பிராந்திய நாடுகளின் உதவியும் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி தெரிவித்தார்.
இதன் போது இராஜாங்க அமைச்சர் இவ்வாறும் தெரிவித்தார், 'எமது அமைச்சின் கீழ் உள்ள நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சார்க் நாடுகளின் அனுசரணையில் இவ்வாறான வேலைத்திட்டமொன்றை செய்ததற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தெற்காசிய நாடுகளில் நிலவும் மந்த போசணை நிலைமையை நீக்குவதற்கு, இங்கிருக்கும் மீன் வளத்தின் புரதச் சத்து பெரிதும் உதவுகிறது. ஆனால் அதிகரித்துச் செல்லும் சனத்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப, மீன் உற்பத்தியின் அளவு அதிகரிப்பதில்லை என புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'அதனை நிவர்த்தி செய்ய பல நாடுகளின் ஒன்றியங்கள் மூலம் இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அவசியம்'.
இந்த மாநாட்டிற்கு சார்க் நாடுகளின் நீர் வாழ் உயிரினங்கள் தொடர்பான துறைகளின் நிபுணர்கள், விவசாய, நீர்ப்பாசன, கிராமியப் பொருளாதார, கால்நடை, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை தொடர்பான அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ்.ருவன்சந்த்ரா அவர்கள், அமைச்சின் மேலதிக செயலாளர்கள் உட்பட உயர் அதிகாரிகள், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை தொடர்பான அமைச்சு தொடர்பான நிறுவனங்களின் உயரதிகாரிகள், தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நுவன் பிரசன்ன மதவன்ஆரச்சி, உள்ளிட்ட அதனது ஊழியர்கள் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
ரிஹ்மி ஹக்கீம்,
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களம்