மட்டக்களப்பில் பெண்களை இலக்கு வைத்து நடைபெறும் சட்டவிரோத செயல்களும் அதன் பிரதிபலிப்பாக நடைபெறும் திடுக்கிடும் சம்பவங்களும்





திறமையான பெண் அழகான உலகைப் படைக்கிறாள் என்ற தொனிப் பொருளிலான சர்வதேச மகளிர் தின நிகழ்வு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் 08.03.2019 அன்று சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக் கழகத்தி;ல் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையில் நிகழ்ந்தது அஸீஸ் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,

மட்டக்களப்பு மாவட்;டத்தில் இன்று போதைப்பொருள் பாவனை சிறியோர் முதல் வயோதிபர் வரை மலிந்து காணப்படுகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது தாய்மார்களே. சொகுசு வாழ்;க்கையில் விருப்பம் காட்டி எத்தனையோ வங்கிகள் நுண்கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி பெண்களை கடன்காரர்களாக ஆக்குகிறது. ஆடம்பரப்பொருட்களை கொள்வனவு செய்து அதனை மாதாந்த தொகையுடன் செலுத்த முடியாமல் எத்தனையோ பெண்கள் பரிதவிக்கின்றனர். அது மட்டுமின்றி வாழ வழியின்றி குடும்பத்தினரின் துணையின்றி எத்தனையோ பெண்கள் தற்கொலை செய்து வருகின்ற விடயம் எமது மாவட்டத்தில் கவலைக்குரிய நிகழ்வாக நாள்தோறுத் அறிய முடிகிறது.

பெண்கள் மீதான அடக்கு முறைக்கெதிரான மாற்றுக் கருத்துக்கள் முன்வைக்க வேண்டிய தேவைப்பாடு அனைவருக்கும் உள்ளது. பெண்கள் பொறுமை, அடக்கம் போன்ற குணாதிசயங்களைக் கொண்டிராத சந்தர்ப்பத்தில் பெண்மை இழந்தவள் என்று இந்தச் சமூகம் முத்திரையிடுகிறது. எது எவ்வாறிருப்பினும் ஒரு பெண்ணி;ன் ஆதரவு இன்றி எந்தத் தனி மனிதனும் முன்னேறிய வரலாறு கிடையாது என்பதை அனைவர்களும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்று நாட்டின் அபிவிருத்தியில் முன்னின்று உழைக்கும் சக்தியாக பெண்கள் முன்னேறி;க் கொண்டிருக்கி;ன்றனர். அவர்களி;ன் கடின உழைப்பி;ல் எத்தனையோ குடும்பங்கள் வாழ்கி;ன்றது. ஆண்களைப் போலவே பெண்களும் இன்றுவேலைத் தளங்களுக்குச் சென்று உழைத்து ஊதியம் பெறுகி;ன்றனர். மற்றுமோர் வகையி;ல் முறைசாறாத் தொழில்களில் அற்பணி;ப்புடன் ஈடுபட்டு அதில் பெருமளவு சம்பாதி;த்து தொழில் வளங்குனர்களாக மாறியிருப்பதையிட்டு பெண் சமுகம் பெருமை கொள்கிறது. பெண்களின் உழைப்பினில் பெருமதியிருப்பதால் அரசதரப்பினர் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -