அவர் மேலும் தமது செய்தியில்,
தாயாய், தாரமாய், தங்கையாய், மகளாய் பல்வேறு உறவுகளில் குடும்பத்தையும், சமூகத்தையும் செழிக்கச் செய்யும் மாதர்குல மாணிக்கங்களா ன பெண்ணினத்தின் சிறப்புகளை எமது முன்னோர்கள் பாராட்டி வாழ்த்தி மகிழ்ந்துள்ளார்கள். தமது குடும்பத்தை வழிநடத்திச் செல்வதற்கு மிகுந்த அர்ப்பணிப்போடு, உடலை வருத்தி அனுதினமும் பாடுபட்டு வரும் பெண்ணினத்தின் பெருமைகளை வெறுமனே வார்த்தைகளால் வர்ணித்து விடமுடியாது. எனவேதான், அவர்கள் இந்த நாட்டில் உண்மையான அந்தஸ்து பெற்ற குடும்பப் பெண்களாக மாற வேண்டும் என்பதற்காக தனி வீட்டுத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் உரித்தாகும் வகையில் வீட்டுக்கான உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மலையகத்தில் அனைவருக்கும் தனி வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே எனது இலட்சியம் ஆகும். முதற்கட்டமாக 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் முடிக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்திருந்தோம். அதற்கான அடித்தளத்தை இட்டு சுமார் 8 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 2020 ஆண்டில் எமது 50 ஆயிரம் என்ற வீட்டு இலக்கில் 25 ஆயிரம் வீடுகளை பூர்த்தி செய்வதற்கு முனைப்போடு பணிகள் இடம்பெற்று வருகின்றன.
அதேபோல், பெருந்தோட்ட மக்களுக்கு வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது 50 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாம் வெறுமனே விமர்சனம் செய்து கொண்டிருக்காமல், விமர்சனங்களை கண்டு அஞ்சாமல் மலையக மக்களுக்கான எமது சேவைகளை தொடர்ந்து வருகின்றோம்.
மலையக மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பது சுலபமான காரியம் அல்ல. அந்த வகையில் நாம் எமது இலக்கை நோக்கிய பயணத்தில் எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை வெற்றி கொண்டு மக்களுக்கான உண்மையான சேவையை நிச்சயம் வழங்குவோம். அவரகளின் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். எனவே, மலையக மக்கள் நம்பிக்கையுடன் ஒற்றுமையாக இருந்து எமது வேலைத் திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
