எம்.என்.எம்.அப்ராஸ்-
நாட்டில் தற்போது நிலவும் திடீர் வெப்பநிலை மாற்றம் காரணமாக கிழக்கு மாகாணத்த்தில் அம்பாறை மாவட்ட பிரதான வீதியோரங்களில் இளநீர் வெள்ளரிப்பழம், வர்த்தப்பழம் ஆகியன விற்பனை செய்வதை காண முடிகிறது.வெப்பத்தை தணிப்பதற்காக
இவ் வகையான பழங்களைபொது மக்கள் அதிகமாக கொள்வனவு செய்து வருகின்றனர்.
இதேவேளை இளநீர் ரூபா 80 தொடக்கம் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் வர்த்தப்பழம் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக இப் பிரதேசங்களில் வெள்ளரிப்பழத்திற்கு மிகுந்த கிராக்கி காணப்படுவதுடன் ஒரு வெள்ளரிப்பழம் 150ரூபா முதல் 250ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது.