37 முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கு தடைப்பட்டிருந்த நிலுவைக் கொடுப்பணவுகள் வழங்கி வைப்பு.
அதி மேதகு ஜனாதிபதி அவர்களும் நாங்களும் மாகாண சபைத்தேர்தல் நடாத்தப்படவேண்டும், எந்தக்காரணம் கொண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படக்கூடாது,18 மாதங்களுக்கு மேலாக மாகாண சபை களைக்கப்பட்டு மக்களுடைய நிறுவாகத்தினை மக்கள் பிரதிநிதிகள்தான் செய்ய வேண்டும்,அரச அதிகாரிகளிடம் நிருவாகத்தினை முழுமையாக ஒப்படைக்க முடியாது,ஆகவே யுத்தம் இல்லாத ஒரு அமைதியான தேர்தல் வைக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருந்தும்கூட தேர்தல் இல்லாமல் கிழக்கு மாகாண சபை இவ்வாறு செல்வதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் நாங்களும் அரசாங்கத்திடமும் பிரதமரிடமும் பல தடவைகள் உடனடியாக மாகாண சபைத்தேர்தலை நடாத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறோம்.
தேர்தல்களை நடாத்துவதில் அமுல்படுத்த வேண்டிய புதிய சட்ட திருத்தத்திலேயேதான் தேர்தல் நடாத்துவதில் தாமதம் எனவே எதிர்வரும் ஜூன் ஜூலை மாதங்களுக்குள் மாகாண சபைத்தேர்தலை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
2017ம் ஆண்டுக்கான 37 முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கு தடைப்பட்டிருந்த நிலுவைக் கொடுப்பணவுகள் மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் பெறப்பட்டு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கும் வைபவம் ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண சபை தவிசாளர் சந்திதாச கலபதி தலைமையில் இடம் பெற்றது.இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பங்கேற்று இவ் நிலுவைக் கொடுப்பணவுளை வழங்கி வைத்தார்.