மேற்படி சம்பவம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:
அமைதி நிலவுகின்ற-இனவாதமற்ற நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று.அந்த நாட்டின்மீது உலக மக்கள் நன்மதிப்பு வைத்துள்ளனர்.அப்படிப்பட்ட நாட்டில்கூட இன்று முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் நுழைந்துவிட்டது.
உலகம் பூராகவும் முஸ்லிமக்ளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனஅழிப்பின் தொடராகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.எந்தவிதமான குற்றச் செயல்களிலும் இனவாத செயற்பாடுகளிலும் ஈடுபடாது அமைதியாக வாழ்ந்து வரும் நியூசிலாந்து முஸ்லிம்கள்மீது முஸ்லிம்களுக்கு எதிரான சதி திரும்பியுள்ளது.
இந்த நிலைமையை நீடிக்க விடக்கூடாது.அப்பாவி முஸ்லிம்கள்மீது மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொலை வெறி மீண்டும் தொடராமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அந்த நாட்டு அரசு குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கு எதிரான இவ்வாறான தாக்குதலின் ஊடாக அந்த நாட்டில் அமைதியைக் குழப்பவும் முஸ்லிம்களை பிழையான வழிக்கு இட்டுச் சென்று அவர்களை அழிக்கவும் திட்டமிடும் சக்திகளுக்கு இந்த நாட்டு அரசு இத்தோடு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.-எனக் கேட்டுள்ளார்.