மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயத்தின் புதிய அதிபராக மருதமுனையைச் சேர்ந்த இப்றாலெப்பை உபைதுல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.உடனடியாகச் செயற்படும் வகையில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் இவருக்கான நியமனத்தை வழங்கியுள்ளார்.மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் பிரதி அதிபராகக் கடமையாற்றிய நிலையிலேயே இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.இவர் எதிர்வரும் திங்கள்கிழமை தனது கடமையைப் பொறுபேற்கவுள்ளர்.
இப்றாலெப்பை உபைதுல்லா 1969.10.20ஆம் திகதி மருதமுனையில் பிறந்தவர் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர் கொழும்பு பல்கலைக்கழக கலைத்துறை பட்டதாரியுமாவார்.1997.01.01ஆம் திகதி ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்று வரிப்பத்தாஞ்சேனை மஜீத் புர வித்தியாலயத்தில் தனது கடமையை ஆரம்பித்து மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி,மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயம்ஆகிய பாடசாலைகளில்; கடமையாற்றியுள்ளார்.
2008ஆம் ஆண்டு திறந்த பல்கலைக் கழகத்தில் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியையும்,1999ஆண்டு திறந்த பல்கலைக் கழகத்தில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா கற்கை நெறியையும்,2018ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவகத்தில் பாடசாலை முகாமைத்துவ கற்கை நெறியையும் பூர்த்தி செய்துள்ளதுடன் 2012ஆம் ஆண்டு அதிபர் பரீட்சையில் சித்தி பெற்று 2ஆம் தர அதிபரானார்.இவர் மருதமுனைனையைச் சேர்ந்த மர்ஹ_ம் இப்றாலெப்பை உம்மு றஸீனா தம்பதியின் புதல்வராவார்.