கல்முனை பிராந்திய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மார்ச் 15, 16 திகதிகளை வாடிக்கையாளர் தினமாகஅறிவிப்பு


றியாத் ஏ. மஜீத்-

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பட்டியல் பிரச்சினைகள் தொடர்பானதெளிவினையும் தீர்வினையும் வழங்கும் நோக்குடன் கல்முனை பிராந்திய நீர் வழங்கல் காரியாலயம் எதிர்வரும்மார்ச் 15,16ம் திகதிகளை வாடிக்கையாளர் தினமாக அறிவித்துள்ளதாக கல்முனை பிராந்திய நீர் வழங்கல்வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் ஏ.எம்.ஜவாஹிர் தெரிவித்தார்.
இவ்வாடிக்கையாளர் தின நிகழ்வுகள் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள பிராந்திய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை காரியாலயத்தில் இடம்பெறஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்தினத்தில் வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளல், நீர்ப்படியல் நிலுவைகளைசெலுத்துதல், பெயர் மாற்றம், முகவரி மாற்றம் தொடர்பான முறைப்பாடுகள், பட்டியல் வர்க்க மாற்றம் தொடர்பானமுறைப்பாடுகள், உள்ளக நீர்க்கசிவு தொடர்பான முறைப்பாடுகள், நீர்மானி அமைவிடத்தினை மாற்றுதல்தொடர்பான முறைப்பாடுகள், தாமதக் கொடுப்பனவு தொடர்பான முறைப்பாடுகள், நீர் வழங்கல் சபையினால்வாடிக்கையாளருக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதிகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் போன்ற சேவைகள்வழங்கப்படவுள்ளதுடன் குறித்த தினத்தில் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளுமாறு பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் ஏ.எம்.ஜவாஹிர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -