ஓரங்கட்டப்பட்ட குரல்களுக்குஊடகங்களில் இடம் வழங்கப்படவேண்டும்- கையடக்கத் தொலைபேசிகாணொளி மாநாட்டில் தீர்மானம்

எம்.ரீ.எம்.பாரிஸ்-
லங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர்மன்றம் பெப்ரவரி 25, 2019 கையடக்கத்தொலைபேசி காணொளி மாநாடு 24 மோஜோ(Mobile Journalism or மோஜோ) செய்திவழங்குனர்களுக்கு அவர்களின்சொந்த மாவட்டங்களில் குரலற்றறோருக்காக குரல் எழுப்புவதில் கடப்பாட்டுடன், உயிர்ப்பானபங்குபற்றலை வழங்கியமைக்காக சான்றிதழ்கள்வழங்குவதுடன், கடந்த பெப்ரவரி 23, 2019 அன்றுஇலங்கை பவுண்டேசன் நிலையத்தில் இனிதேநிறைவுற்றது.

கையடக்கத்தொலைபேசி ஊடகவியல்கிராமப்புறங்களிலுள்ள பாதிப்புக்குட்படக்கூடியமக்களின் குரலெழுப்ப முடியாத பிரச்சினையைத்தீர்ப்பதற்கான வினைத்திறன் மிக்ககருவியாககாணப்படுகின்றது.

இலங்கையில் முதல் தடவையாக இலங்கைஅபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றம்  யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் திருகோணமலைஆகிய மாவட்டங்களிலிருந்து 30 இளம் மோஜோஊடகவியலாளர்களைத் தெரிவு செய்து, தெரிவுசெய்யப்பட்ட பிரச்சினைகளை அவற்றைசான்றுகளுடனான செய்தி வழங்குதல் மூலம்எடுத்துக்கூறலூடாக எவ்வாறு வினைத்திறனுடன்குறித்த பிரச்சினைகளைத்தீர்ப்பதில் கையடக்கதொலைபேசிகள் பயன்படுத்தப்பட முடியுமென்பதுதொடர்பில் வழிகாட்டல்களை வழங்கியது.

இந்த செய்தி வழங்குநர்கள் 30 இற்கும் மேற்பட்ட செய்திகளைத்தயாரித்ததுடன், அவற்றைதீர்ப்பத்தில் குறித்த மாவட்டங்களிலுள்ள தொடர்புடைய பங்குதாரர்களுடன்இணைந்து எடுத்துக்கூறல் நடவடிக்கைகளிலும்ஈடுபட்டனர்.

இந்த இளம் மோஜோ ஊடகவியலாளர்கள் கடந்தமார்ச் 23, 2019 அன்று ஸ்ரீலங்கா பெளண்டேஷன்நிலையத்தில் தமது கையடக்கத் தொலைபேசிமூலமான செய்திகளைக் காண்பிக்கவும் கையடக்கத்தொலைபேசி காணொளி மாநாடு 2019 இனூடாக ஒரு தேசிய மட்ட கலந்துரையாடலில்ஈடுபடவும் ஒன்று கூடினர்.

இவ்வாறானதொரு மாநாடு இலங்கையில்இடம்பெற்றது இதுவே முதல் தடவையாகும்.

இந்த மாநாட்டில் 50 இற்கும் மேற்பட்ட இளம்செய்தி வழங்குநர்கள், ஊகவியலாளர்கள், ஊடகச்செயற்பாட்டாளர்கள் மற்றும் ஏனைய அதிதிகள்கலந்து கொண்டனர். மாநாட்டில் இந்த இளம்செய்தி வழங்குனர்கள் தயாரித்த கையடக்கதொலைபேசி செய்திகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், அவர்கள் தம்முடையவெற்றிக்கதைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

அத்துடன், ஓரங்கட்டப்பட்டமக்களின் குரல்கள்மற்றும் அவர்களது கரிசனைகளை பாரிய சமூகவிழிப்புணர்வுக்கு உட்படுத்துவதில் (Mobile Journalism or தொலைபேசியூடான செய்தி வழங்குதல் திறன்எவ்வாறு பயன்மிக்கதாகக் காணப்படுகின்றதென்பது தொடர்பிலும் எடுத்துரைத்தனர்.
இந்த மாநாடு மோஜோ செய்தி வழங்குனர்களைப்பிரசித்தமிக்க ஊடக நிறுவனங்களின் சிரேஷ்டஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய துறைசார்ஊடகவியலாளர்களுடன் ஒன்றிணைத்தது.

இந்த மாநாட்டில் “ஓரங்கட்டப்பட்ட குரல்களைவெளிக்கொண்டு வருவதில் புதிய ஊடகத்தின்வகிபாகம்”என்ற தலைப்பில் நிபுணர்குழுக்கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.

இலங்கை ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் திரு. குமாரவ் அழகியவன்ன மற்றும் திரு. MJR. டேவிட், சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின்திரு. மஞ்சுளஎதுகல, டான் தொலைக்காட்சியின்திரு. ராமகிருஷ்ணா? இலங்கை செய்திஇணையத்தள (Lanka News Web) ஆசிரியர் செல்வி. ராதிகாகுணரத்ன மற்றும் UTV நிறுவனத்தின் திரு. மொஹம்மத் பிஸ்ரின் ஆகிய துறைசார்விற்பன்னர்கள் புதிய ஓரங்கட்டப்பட்டசமூகங்களின் செய்திகளைச்சொல்வதில்எவ்வாறான தாக்கங்களைச்செலுத்தமுடியுமென்பது தொடர்பில் தமது நோக்குகள்மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து உயிர்ப்பானகலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

களனிப் பல்கலைக்கழக வெகுசன ஊடகங்கள்மற்றும் தொடர்பாடல் துறையின் சிரேஷ்டவிரிவுரையாளர் சாமந்திகா பிரியதர்ஷனி இந்தஉரையாடலின் மட்டறுப்பாளராகக்கடமையாற்றினார்.

“அரச ஊடகங்கள் தாம் நிறுவனங்களினுள் தாம்எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவை வழங்கும்நிகழ்ச்சிகளின் துறைசார் தன்மை மற்றும் தரம்என்பவற்றில் அதிக கவனக்குவிவை கொள்ளவேண்டியிருப்பதால், ஓரங்கட்டப்பட்ட குரல்களைஉள்ளடக்குவதில் பிரச்சனைகளைஎதிர்நோக்குகின்றன.

எனவே புதிய ஊடகத்தை இலங்கையின் பிரதானஊடக நீரோட்டத்துடன் இணைப்பது உண்மையில்சவாலுக்குரிய விடயம்” என இலங்கை ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் குமார அழகியவன்னதெரிவித்தார்.

“பிரதான ஊடக நீரோட்டம் சமகாலத்தில் புதியஊடகத்தில் தங்கியுள்ளது. உதாரணமாக, இந்தியாவில் இடம்பெற்ற ‘ஜல்லிக்கட்டு’ முதலில்புதிய ஊடகத்திலேயே பிரபல்யமடைந்தது. எனினும், பின்னர் பிரதான ஊடகங்களின்கவனயீர்ப்பைப் பெற்றுக்கொண்டது.

எனவே, எம்மால் மாறி வரும் போக்கைஅவதானிக்க முடியும். அதீத பிரசித்தம் (Viral) புதியஊடகத்தின் இயல்பாகக் காணப்படுகின்றது.

அதனை எதிர்காலத்தில் பேணுவதற்கு சமூகம்நிர்ணயிக்கும் நியமங்கள் அவசியம்” என டான்தொலைக்காட்சியின் திரு. ராமகிருஷ்ணாதெரிவித்தார்.

“இலங்கையில் மிகவும் சிக்கல் வாய்ந்தஊடகச்சூழல் தொகுதி காணப்படுகின்றது. எனவேதற்பொழுது பிரதான ஊடகம் மற்றும் புதியஊடகம் என்பவற்றைத் தெளிவாக வேறு பிரிக்கமுடியாத நிலை காணப்படுகின்றது.

ஓரங்கட்டப்பட்ட குரல்களை பிரதான நீரோட்டத்தில்உள்ளடக்க வாய்ப்பொன்று காணப்படுகின்றது. அரச ஊடகங்களை பொதுமக்கள்ஊடகங்களாக உருமாற்றம்செய்வதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே குழுவொன்றைஅமைத்துள்ளது.

எனினும், பொதுமக்கள் ஊடகமென்றால்என்னவென்பது இன்னும்விவாதத்துக்குரிய விடயமாகவே காணப்படுகின்றது” என பிரதம அதிதியும் குழுஉறுப்பினரும் மற்றும் மனித உரிமைகள்செயற்பாட்டாளருமான சுதர்ஷனகுணவர்தன தெரிவித்தார்.

மாநாட்டில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றும்நிகழ்ந்து. அங்கு செய்தி வழங்குநர்கள் தமதுஅனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், கையடக்கதொலைபேசி மூலமான செய்திவழங்குதல் தொடர்பான கேள்விகளுக்கும்பதிலளித்தனர்.

இந்த மோஜோ காணொளி மாநாடு வறுமையைபோக்குவதற்காக ஓரங்கட்டப்பட்ட குழுக்களைடிஜிட்டல் வலுப்படுத்தல் (DEV – GAP) என்றநிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக நீலன்திருச்செல்வம் அறக்கட்டளையின் (NTT) இந்தஉதவியுடன் இலங்கை அபிவிருத்திஊடகவியலாளர் மன்றத்தினால் (SDJF) ஏற்பாடுசெய்யப்பட்டது.


















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -