வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் (14) மாணவிகளின் மாதிரிச் சந்தையொன்று நடைபெற்றது.
தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணிவிகள் நடாத்திய இச் சந்தைத் தொகுதியை பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் ஆரம்பித்து வைத்தார்.
தரம் ஐந்து வகுப்பாசிரியர்களான எம்.பீ.பாயிஸ், திருமதி கெளசல்யா ஆகியோரின் வழிப்படுத்தளில் நடைபெற்ற இச் சந்தையில் மரக்கரி வகைகள், பழவகைகள், பூஞ்செடிகள், பலசரக்கு மற்றும் துணி வகைகள் போன்ற ஏறாளமான பொருட்கள் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தது.
இச் சந்தையில் பாடசாலையில் கல்வி கற்கும் ஏனைய மாணவிகளும், ஆசிரியர்கள் ஆகியோர்கள் பொருட்களைப் பார்வையிட்டதோடு, அதனை கொள்வனவும் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.