துறைமுகப் பாதுகாப்பு தொடர்பில் ஆற்றல் மேம்படுத்தல் நடவடிக்கையொன்றை 25 இற்கும் மேற்பட்ட இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் பெப்ரவரி மாதம ; 11 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை நடத்தினர். துறைமுகத்தின் பௌதீக பாதுகாப்பு முறைமைகள் மற்றும் பாதுகாப்பு ஆற்றல்களை பலப்படுத்த இந்த நிகழ்வு உதவியதுடன், துறைமுக பாதுகாப்பு திட்டங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் அமுலாக்கத்தை மேம்படுத்திய பயிற்ச்சிகளையும்
இது உள்ளடக்கியிருந்தது. இலங்கைக்கு கடல்வழி பாதுகாப்பு என்பது பயங்கரவாதம் மற்றும் ஏனைய அச்சுறுத்தல்களில் இருந்து அதிரித்த பாதுகாப்பை வழங்குவது மட்டுமல்லாது, இலங்கையின் சுபீட்சத்துக்கு பங்களிப்புச் செய்யும் ஏனைய நாடுகளுடனான வர்த்தகங்களை அதிகரிக்கவும் செய்யும் 'துறைமுக பாதுகாப்பு தொடர்பில் இலங்கை வலுவான உறுதிப்பாடொன்றை வெளிப்படுத்தியது,
என்று இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு தலைமை வகித்த துறைமுக பாதுகாப்பு முன்னெடுப்புகளுக்கான இலங்கைக்கான அமெரிக்க கரையோர பாதுகாப்பு படையின் இணைப்பதிகாரி லெப்டினன்ட் மெற் ஆர்னோல்ட் தெரிவித்தார். 'அதிகரித்த வர்த்தகங்களுக்கும் மற்றும் வர்த்தகத்துக்கான பிராந்தியமையமாக உருவாகும் இலங்கையின் இலக்கை அடைவதற்கும் அத்தியவாசியமான பாதுகாப்பு சூழலை உருவாக்குவதற்கு இந்த ஆற்றல் மேம்படுத்தல் நடவடிக்கை உதவியது,' என்றும்அவர் குறிப்பிட்டார்.
கரையோர பாதுகாப்பு படையின் சர்வதேச துறைமுக பாதுகாப்பு திட்டமானது கடல்வழி பாதுகாப்பு நடவடிக்கைகளின் புரிந்துணர்வுகளை உலக அளவில் விஸ்தரிப்பதற்காக 2003 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இந்த சர்வதேச தரங்களின் அமுலாக்கமானது கடற்பிராந்திய
நாடுகளுக்கிடையிலான உலளாவிய பங்காண்மையொன்றாகும்.