புதிய வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

ஹஸ்பர் ஏ ஹலீம்-
ள்நாட்டில் நடைபெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எந்தவித அடிப்படை வசதியின்றி தமது வாழ்க்கையை மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வந்த நிலாவெளி இக்பால் நகர் alminar ( ஆக்குவத்த)புதிய மீனவ கிராம மக்களுக்கான 25 வீடுகள் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு வைபவரீதியாக நேற்று ஞாயிற்றுக் கிழமை மாலை திருகோணமலை நகர சபையின் உறுப்பினர் எம்.எம்.முக்தார் தலைமையில் நடைபெற்றது.

இத் திட்டமானது வீடமைப்பு மற்றும் நிர்மானத் துறை கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ அவர்களின் அனைவருக்கும் ஒரே "கூரையின் கீழ் நிழல்" என்ற தொனிப்பொருளில் அடிப்படையில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் வழிகாட்டலுடன் கிடைக்கப்பெற்றது.
புதிய வீட்டுக்கான அடிக்கல்லை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்கள் நட்டி வைத்தார்.
இந் நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களும் மற்றும் அவரின் பிரத்தியேக செயலாளர் எம் பி எம் முஸ்தபா(அதிபர்) இணைப்புச் செயலாளர் ஈ.எல். அனீஸ் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆதம்பாவா தௌபீக் வீடமைப்பு அதிகார சபையின் பிரதிநிதி காண்டீபன் இக்பால் நகர் கிராம உத்தியோகத்தர் சமுர்த்தி உத்தியோகத்தர் நிலாவெளி பொலீஸ் நிலைய அதிகாரி மற்றும் சங்கங்கள் தி/முஹமதியா முஸ்லிம் வித்தியாலய அதிபர் விளையாட்டுக் கழகங்கள் பயனாளிகளும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -