கடலால் சூழப்பட்ட இலங்கையில் 2018 இல் 84,463 மெற்றிக் டொன் மீன் இறக்குமதி - வருகிறது கட்டுப்பாடு


மீனவ சமூகத்தின் கோரிக்கைக்கு அமைய மீன் இறக்குமதியைக் கட்டுப்படுத்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி தீர்மானித்துள்ளார்.

தேசிய மீனவர்களையும், மீன்பிடித் துறையையும் காப்பதற்கே இராஜாங்க அமைச்சர் இத் தீர்மானத்தை எடுத்துள்ளார். மீன்கள் அதிகமாக பிடிபடும் காலப்பகுதியான செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் இந்த இறக்குமதி கட்டுப்பாட்டை விதிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சரை பல கட்டங்களாக சந்தித்த மீனவ சங்கத்தினர் உட்பட, பலரும் முன்வைத்த முறைப் அதிக மீன்கள் இறக்குமதி செய்யப்படுவதால் தாம் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாகும்.

அண்மையில் மீன்பிடி படகு உரிமையாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில், அதிக மீன் இறக்குமதியினால் தமது மீன்களை விற்க முடியாத நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

கடற்றொழில் திணைக்கள தகவல்களின் படி 2018 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட மீன்கள் 84,463 மெட்றிக் தொன்கள் ஆகும். அதற்காக ரூபா 32,726 செலவிடப்பட்டுள்ளது. கருவாடு, நெத்தலி, மாசி, டின் மீன், அழகு மீன்கள் உள்ளடங்களாக இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பாரியவொரு தொகை வெளிநாட்டுக்காக செலவிடப்படுவது துர்ப்பாக்கிய நிலைமை ஆகும். உள்நாட்டு மீனவர்களைக் காப்பதற்காக அதிக மீன்களைப் பிடிக்க, தேவையான வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம் பெரும் தொகை பணத்தை மீதப்படுத்த முடியுமாக இருக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

தயாரிப்புகளுக்கான மீன்களை மொத்தமாக உள்நாட்டு மீனவர்களிடம் கொள்வனவு செய்யவும், இறக்குமதி தயாரிப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறிய இராஜாங்க அமைச்சர், மீன் உற்பத்தி குறைந்த காலங்களில் கட்டுப்பாடுகளுடன் இறக்குமதிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

அத்துடன், இது குறித்து அரசிற்கு அறிவித்து விரைவாக உரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி மேலும் தெரிவித்தார்.

ரிஹ்மி ஹக்கீம்,
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம்




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -