கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கெளரவ வடமேல் மாகாண சபை உறுப்பினரும் உயர்நீதிமன்ற சட்டத்தரணியுமான ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், குருணாகல் பிரதேச சபை உறுப்பினர் திக்ருல்லாஹ் ஜிப்ரி அவர்களின் ஏற்பாட்டில், வடமேல் மாகாண சுகாதார மற்றும் மகளிர் விவகார அமைச்சுடன் இணைந்து சமூக சேவைகள் திணைக்களம் நடாத்திய இலவச கண் பரிசோதனை முகாமில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு 2019.01.04 (வெள்ளிக்கிழமை) குருநாகல், அலகொலதெனிய கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கெளரவ வடமேல் மாகாண சபை உறுப்பினர் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா, குருணாகல் பிரதேச சபை உறுப்பினர் திக்ருல்லாஹ் ஜிப்ரி, முன்னாள் ரிதீகம பிரதேச சபை உறுப்பினர் மும்தாஸ், குருணாகல் வலய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளர் முஜீபுர் ரஹ்மான், குருணாகல் வலய இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சகோதரர் இர்பான், பொல்கஹவெல பிரதேச சபை வேட்பாளர் சகோதரர் இம்தியாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது உரையாற்றிய கெளரவ ரிஸ்வி ஜவஹர்சா அவர்கள், அலகொலதெனிய என்ற கிராமத்தை நேரில் வந்து பார்க்கின்ற போது எவ்வளவு தேவைகள் உள்ள கிராமம் என்று புரிகின்றது.
இந்த கிராமத்திற்கு நாம் முதல் முறை வருகை தந்தபோது சகோதரர் திக்ருல்லாஹ் ஜிப்ரி ஊர் மக்கள் சார்பாக எம்மிடம் முன்வைத்த விடயங்களில் ஒன்று தான் ஒரு சுகாதார மத்திய நிலையம் ஒன்று அல்ஹம்துலில்லாஹ் இன்று அதற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது உங்கள் ஊரிற்கான சுகாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான அமைச்சரின் அனுமதிப்பத்திரம்.
அத்துடன் இந்த ஊரின் சுகாதார நிலையத்தை அமைக்கவும், நீர் தேவையை பூர்த்தி செய்ய நீர்த்தாங்கி அமைப்பதற்கான இடத்தினை எலலோரும் பேசி ஒரு பொருத்தமான இடத்தை ஊரில் பெற்றுத்தருமாரும் வேண்டிக் கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வடமேல் மாகாண சமூக சேவைத் திணைக்கள சிரேஷ்ட உறுப்பினர் திரு. பண்டார அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இந்த இலவச கண்ணாடிகள் பிரதேச செயலகத்திற்கு கிடைக்கப் பெற்று சுமார் இரண்டு மாத காலம் நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்ப நிலை காரணமாக உரியவர்களுக்கு வழங்க முடியாமல் இருந்தது, அதற்காக நான் உங்களிடம் மணணிப்புக் கேட்கிறேன் மேலும் கெளரவ வடமேல் மாகாண சபை உறுப்பினர் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா அவருகள் தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இனம், மதம் பேதம் பாராமல் அவரின் சேவைகள் அனைவரையும் சென்றடையும் வகையில் மிகவும் சிறப்பாக செயற்பட்டு வருவதாகவும், இது போன்ற இலவச மூக்குக் கண்ணாடிகள் விநியோகம் பல பிரதேசங்களிலும் நடாத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
தகவல் :
திக்ருல்லாஹ் ஜிப்ரி
குருநாகல் பிரதேச சபை உறுப்பினர்.