நாளை பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள இரு முக்கிய பிரேரணைகள்?


ணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நாளை சபையில் கொண்டுவரப்படவுள்ள நிலையில், ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் மற்றொரு பிரேரணையும் கொண்டுவரப்படவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்ற நம்பிக்கையை வெளிபடுத்தும் பிரேரணையும், ஜனாதிபதி அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் பாராளுமன்றத்தில் நாளை புதன்கிழமை இரு பிரேரணைகள் ஐக்கிய தேசிய முன்னணியினரால் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளன. ரணிலுக்கான நம்பிக்கை பிரேரணையை ஜே.வி.பி எதிர்க்கவுள்ளது.

பாராளுமன்றம் நாளை புதன்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடவுள்ளது. நாளைய தினம் ஐக்கிய தேசிய கட்சியை பலபடுத்தும் அல்லது ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என நிருபிக்கும் பிரேரணையையும் அதேபோல் ஜனாதிபதி அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் பிரேரணையையும் முன் வைக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளன.

இதன்போது முதலாவது பிரேரணையாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக செயற்பட பாராளுமன்றத்தின் அதிக நம்பிக்கை அவர் மீது உண்டென்ற வெளிப்படுத்தும் நம்பிக்கைப் பிரேரணையை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் கொண்டுவரப்படுகின்றது.
இந்த பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம், லக்ஷ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, பழனி திகாம்பரம், மங்கள சமரவீர, ரிசாத் பதியுதீன் ஆகியோர் இணைந்து முன் வைக்கவுள்ளனர். பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டு விவாதமொன்று நடத்தப்பட்டு இலத்திரனியல் முறை வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -