அதாலா பௌன்டேசன் மற்றும் NFGG யின் ஏற்பாட்டிலும் கொழும்பு தேசிய கண் வைத்திய சாலையின் ஒத்துழைப்புடனும் கடந்த 20.10.2018 அன்று காத்தான்குடி ஜுமைரா பீச் பலசில் நடாத்தப்பட்ட இலவச கண் வைத்திய முகாமின் இரண்டாம் கட்டமாக சத்திர சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட
நோயாளிகள் கடந்த 02.11.2018 அன்று கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இவர்களுக்கான கண் சத்திர சிகிச்சை 04.11.2018 ஞாயிற்றுக்கிழமை மிக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது வைத்திய முகாமில் சத்திர சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட சுமார் 87 நோயாளிகளில் முதற்கட்டமாக 50 நபர்களுக்கு சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
கொழும்பு தேசிய கண்வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.ILM.றிபாஸ் அவர்களின் ஒத்துழைப்புடன் இச்சத்திர சிகிச்சைகள் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் கண் வைத்திய நிபுணர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
இதில் காத்தான்குடி, பாலமுனை, அக்கரைப்பற்று, சாய்ந்தமருது, நிந்தவூர், கொம்மாதுறை, ஏறாவூர், ஓட்டமாவடி உள்ளிட்ட தமிழ் முஸ்லிம் சகோதர சகோதரிகள் அடங்கலாக பலரும் சிகிச்சைகளைப் பெற்று பயனடைந்தனர்.
சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து பயனாளிகள் அனைவரும் இன்றைய தினம் மீண்டும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்புகின்றனர். இதற்கான சகல ஏற்பாடுகளையும் NFGGயின் சமூக சேவைப்பிரிவினர் மேற்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



