காணியை விடுவிக்க நடவடிக்கை எடுத்த ஜனாதிபதிக்கும் நன்றிதெரிவிப்பு!
காரைதீவு பிரதேசசபை அமர்வில் தவிசாளர் ஜெயசிறில் மகிழ்சி!
காரைதீவு நிருபர் சகா-படையினர் வசமுள்ள காரைதீவு பிரதேசசபைக்குரிய காணியை மீள ஒப்படைப்பதற்கு ஏதுவாக இன்றைய அமர்வில் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழச்சிக்குரியது. வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்த கௌரவ ஜனாதிபதிக்கும் சபை சார்பாக நன்றிகூறுகிறேன்.
இவ்வாறு காரைதீவு பிரதேசசபையின்விசேட அமர்வில் உரையாற்றிய தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
இவ் விசேட அமர்வு (02) வெள்ளிக்கிழமை சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றபோது கடந்த பல தசாப்தகாலமாக காரைதீவு பிரதானவீதியில் முகாமிட்டுள்ள இலங்கைப்படையினர் முகாமிட்டுள்ள காணியை விடுவிப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டபோது சபை உறுப்பினர்கள் பூரண ஆதரவுதெரிவித்தனர்.
ஆக உப தவிசாளர் எ.எம்.ஜாகீர் மற்றும் மு.கா உறுப்பினர் எம்.இஸ்மாயில் ஆகிய இருவரும் நடுநிலைவகித்தனர். எவரும் எதிர்ப்புத்தெரிவிக்கவில்லை.
தவிசாளர் ஜெயசிறில் அங்கு மேலும் கூறுகையில்:
கடந்த ஆட்சிக்காலத்தில் மாறி மாறி சிறுபான்மையினர் தொடர்ந்து ஏமாற்றப்பட்டேவந்திருக்கின்றன. அதுவே வரலாறு. சிலர் பதவிக்காக அடிமையாகினர். அதனை ஆட்சியாளர் பயன்படுத்திவந்துள்ளனர். ஆதலால் எமக்கான உரிமைகள் யாவும் தாமதிக்கப்பட்டன.
இன்று கௌரவ ஜனாதிபதியே முன்வந்து வடக்கு கிழக்கு காணியை விடுவிக்க நடவடிக்கைஎடுத்துள்ளார். இது நல்ல சகுனம்.
வருமானம்குறைந்த எமது சபைக்கு வருமானத்தைக்கூட்டிக்கொள்ளவும் எமது சபைக்கான சொத்தை மீளப்பெறவும் இது வழிவகுத்திருக்கிறது. அந்த இடத்தில் நல்லதொரு சந்தைத்தொகுதியை அமைக்கலாம். மூவினமும் அதில் பயன்பெறலாம்.
படையினரை எமது காணியிலிருந்து அகன்று வேறெந்த அரசகாணியிலோ எந்தக்காணியிலோ அவர்கள் சம்மதத்துடன் அமரலாம் அதற்கு நாம் தடையில்லை. என்றார்.
நிதிக்குழு அமைப்பது தொடர்பில் ஒருமணிநேரம் கருத்தெடுக்கப்பட்டு அடுத்த கூட்டத்தில் நிதிக்குழு அமைப்பது என்றும் தீர்மானமாகியது.
கூட்டத்தில் உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் உறுப்பினர்களான எம்.இஸ்மாயில் எ.பஸ்மீர் ச.நேசராசா த.மோகனதாஸ் கி.ஜெயராணி ஆ.பூபாலரெத்தினம் இ.மோகன் எ.றணீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மழைக்குமுதல் திண்மக்கழிவகற்றலை அந்தந்த வட்டார பிரதிதிநிதிகள் உறுதிசெய்துகொள்ளவேண்டும்.
