தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது


தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் கற்கை நெறிகளுக்கு 2019 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பதாரிகளிடமிருந்து அவர்களின் தகமைகளையும் திறமைகளையும் அடிப்படையாக கொண்டு தெரிவுசெய்யப்பட்டு கற்கை நெறிக்காக மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர். இதற்கான வர்த்தகமானப் பத்திரிகை கடந்த வெள்ளிக்கிழமை (2) வெளியிடப்பட்டது.

சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரிகள் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் உள்ள 39 தொழில்நுட்பக் கல்லூரிகளில் முழு நேர மற்றும் பகுதி நேர கற்கை நெறிகள் நடைபெற உள்ளதுடன் இத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் பாடநெறிகள் தொடர்பான அட்டவணையும் வெளியிடப்பட்டது. பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவங்களை 2018.12.03 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சேர விரும்பும் தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் அல்லது பணிப்பாளருக்கு கிடைக்கக்கூடிய வகையில் பதிவுத் தபாலில் அனுப்பிவைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -