மூவின மாணவர்களும் ஒன்றாகவிருந்து கற்கும் நிலையேற்பட்டால் நிரந்தர சமாதானம் உருவாகும்!

வலயதீபாவளி விழாவில் பிரதிக்கல்விப்பணிப்பாளர் கியாஸ்.

காரைதீவு நிருபர் சகா.-
மூவின மாணவர்களும் ஒன்றாக இருந்து கல்வி கற்கும் நிலையேற்பட்டால் நாட்டில் நிரந்தர சமாதானம் தானாகவே உருவாகும்.
இவ்வாறு சம்மாந்துறை வலய நல்லிணக்க தீபாவளி தின விழாவில் உரையாற்றிய வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் அகமட் கியாஸ் தெரிவித்தார்.
இவ்விழா நேற்று சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் தமிழ் முஸ்லிம் மாணவர்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

சம்மாந்துறை வலய பிரதிக்கல்விப்ணிப்பாளர் செல்வி வி.நிதர்சினி கோட்டக்கல்விப்பணிப்பாளர் சபுர்தம்பி உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜாவலய சமாதான இணைப்பாளர் அச்சிமொகமட் அதிபர் எம்.விஜயகுமாரன் உள்ளிட்டோர் கலந்துசிறப்பித்தனர்.

அங்கு பணிப்பாளர் கியாஸ் மேலும் கூறுகையில்:
எம்மிடமுள்ள கெட்ட குணங்களை அழிக்கும் தினமாக தீபாவளியைக் கொள்ளலாம். அனைத்து சமயங்களும் நல்லவனவற்றையே கூறுகின்றன. சமயநெறிமுறைப்படி வாழ்ந்தால் நாட்டில் மட்டுமல்ல வீட்டிலும் பிரச்சினை எழாது. மாணவர்கள் ஏனைய இனமத கலாசார விழுமியங்களை சிறுவயதில் அறிந்துகொள்ளவேண்டும்.என்றார்.
சமாதான இணைப்பாளர் அச்சிமொகமட் பேசுகையில்:
முக்கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்துசமயம் இன்றும் உலகின் பலநாடுகளிலும் நின்றுநிலைத்திருக்கின்றதென்றால் அதற்கு அதனுள்பொதிந்திருக்கின்ற நல்ல தத்துவங்களும் நடைமுறைகளுமே காரணம்.
1440வருடங்களுக்குமுன் தோன்றிய இஸ்லாம் சமயமும் நல்ல மார்க்கத்தை போதிக்கின்றது.
இந்துக்களின் ஆலயஅமைப்பில் அதன் நடைமுறைகளில் பொதிந்திருக்கின்ற தத்துவங்கள் இயற்கையோடு பின்னிப்பிணைந்தவை.
அன்று நாம்கற்கும்போது இருபக்கமும் இன்பராஜூம் முருகுப்பிள்ளையும் இருந்தார்கள். அதனால் எம்மிடையே எந்தப்பேதமுமிருந்ததில்லை. ஆனாலின்று நிலைமைவேறு. அதனாலேயே இன்று சமாதான நல்லிணக்க விழாக்களை நடாத்தவேண்டியிருக்கின்றது. என்றார்.
இந்துமாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் மேடையேறின.இறுதியில் தீபாவளி பட்சணங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -