வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிண்ணியா பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட மொரவெவ பிரதேச சபையின் தவிசாளரான பௌத்த பிக்குவும் சக உறுப்பினர்களும்

அப்துல்சலாம் யாசீம்-வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிண்ணியா பிரதேசத்திற்கு மொறவெவ பிரதேச சபையின் தவிசாளரும் பௌத்த பிக்குவுமான உபரத்தின தேரர் இன்று (08) குறிஞ்சாங்கேணி பிரதேசத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம அவர்களின் பணிப்புரையின் பேரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் பிரதேச சபைகளின் ஊடாக உதவிகளை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து மொரவெவ பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச சபையின் ஊழியர்கள் அப்பகுதிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.
இதன்போது கிண்ணியா குறிஞ்சான்கேணி பகுதியில் வெள்ளத்தினால் அதிகளவிலான மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து காணப்பட்டமையினால் அவர்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இதனை கவனத்தில் கொண்ட மொரவெவ பிரதேச சபை தவிசாளரும் பௌத்த பிக்குவான உபரத்ன ஹிமி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்
ஏ, எஸ், எம், பைசர், எப்.எம்.அஸ்மிர் ஆகியோர் பகுதியிலுள்ள மக்களுடன் குறைகளை கேட்டறிந்ததுடன் வெள்ள நீர் புகுந்து உள்ள இடங்களை கண்டறிந்து பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி வடிகான்களை சுத்தப்படுத்தினர்.
அத்துடன் மிகவும் வறுமையில் வாழுகின்ற மக்களுக்கு மொரவெவ பிரதேச மக்களின் உதவியுடன் உலர் உணவு பொருட்களை சேகரித்து கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -