கல்பிட்டி பிரதேச சபையின் 8வது அமர்வு 09-10-2018 நேற்றைய தினம் இடம் பெற்றது. இதன் போது புத்தளத்திற்கு கொண்டு வரப்படவுள்ள கழிவகற்றல் திட்டத்தினைக்கண்டித்து , பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் அவர்களின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று சபையின் தவிசாளர் உட்டபட அனைவரினதும் ஆதரவுடன் இடம்பெற்றது.
இதன் போது ஆஷிக் உறையாற்றுகையில் ...
கல்பிட்டி பிரதேச சபையின் 7வது அமர்வின் போது நான் கழிவகற்றல் திட்டத்திற்கு எதிராக பிரேரனையைக்கொண்டுவந்தேன். சபையில் உள்ள அனைவரினதும் ஆதரவில் பிரேரனை வெற்றிப்பெற்றது, இருந்தும் இதுவரை பிரேரனைக்கான முடிவுகள் அரசிடமிருந்து தெரிவிக்கப்படவில்லை,
தொடர்ந்தும் நான் கடந்த வாரம் மன்னாரிலே நடந்த நிகழ்வொன்றின் போது கௌரவ ஜனாதிபதியின் கவனத்திற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் உதவியின் ஊடாக கொண்டு சென்றுள்ளேன். கடிதமொன்றையும் கையளித்துள்ளேன், எதிர்வரும் நாட்களில் பிரதமர்,அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோருக்கு கடிதங்களை கையளிக்கவும் உள்ளேன்.
பல மைகளுக்கு அப்பால் உள்ள கழிவுப்பொருட்களை புத்தளம் அறுவாக்காலு பகுதியில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் பலவந்தமாக அமைச்சர் பாட்டாலி சம்பிக்க மற்றும் இந்த அரசு கொட்டுவதற்கு மக்களின் பிரதிநிதிகளான நாம் எதிர்ப்பினை தெரிப்பதுடன், இந்த அரசு கடந்த ஜனாதிபதித்தேர்தலின் போதும்,பாராளுமன்ற தேர்தலின் போதும் புத்தள மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியுற்ற போதிலும் இந்த அரசினை புத்தளம் தொகுதியில் அதிகப்படியான வாக்குகளால் நாம் வெற்றிப்பெறச்செய்தோம். என்றாலும் இந்த அரசு புத்தளத்தை குப்பைத்தொட்டியாக மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யவேண்டும்.
அனல் மின் நிலையம், சீமெந்து தொழிற்சாலை,காற்றாலை, ஆயுதப்பரிசோதனை முகாம் என தொடர்ச்சியாக புத்தளத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்த முயற்சி செய்த அரசினையே நாம் விரட்டியடித்தோம், அதே தவறை இந்த அரசு செய்ய முற்படுமானால் கட்சிகளுக்கு அப்பால் நாம் ஒன்றுப்பட்டு இந்த அரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்கவும் தயங்கமாட்டோம்.
எனத்தெரிவித்தார்.

