சம்மாந்துறை, மாவடிப்பள்ளி மற்றும் மாளிகைக்காடு பிரதேச பள்ளிவாசல்களின் புனரமைப்பு பணிக்காக பிரதி அமைச்சர் ஹரீஸ் நிதி ஒதுக்கீடு

அகமட் எஸ். முகைடீன்-
பிரதி அமைச்சர் ஹரீஸினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சம்மாந்துறை மற்றும் காரைதீவு பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பள்ளிவாசல்களின் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி ஆரம்பிப்பதற்கு ஏதுவாக குறித்த நிதி ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (26) சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் உதவி பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கிழக்கு மாகா சபை முன்னாள் உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவருமான ஐ.எல்.எம். மாஹிர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் பிரத்தியேக செயலாளர் சட்டத்தரணி எம்.எம். சவ்பீர், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா, பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், சம்மாந்துறை மற்றும் காரைதீவு பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அரசின் கம்பெரலிய நிகழ்சித்திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து பிரதி அமைச்சர் ஹரீஸினால் சம்மாந்துறை மற்றும் காரைதீவு பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பள்ளிவாசல்களின் புனரமைப்பு பணிக்காக ஒவ்வொரு பள்ளிவாசல்களுக்கும் ஆகக் குறைந்தது 5 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -