மில்லத் கல்லூரியின் அபிவிருத்திக்கு ஹிஸ்புல்லாஹ்வினால் நிதி ஒதுக்கீடு!

முகம்மது சஜீ-
காத்தான்குடி மில்லத் மகளிர் கல்லூரியின் அபிவிருத்தி வேலைகளுக்கு முதற்கட்டமாக ஐம்பது இலட்சம் ரூபாய் நிதி நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் ஒதுக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான தொழிநுட்பக் குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு விஜயம் மேற் கொண்டனர்.
இதன் போது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் பாடசாலையின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று இடம் பெற்றதுடன், கல்லூரியின் வரவேற்பு நுளைவாயில் சுற்று மதில், விளையாட்டுத்துறை ஒழுங்குகள் மற்றும் பாடசாலையை அழகு படுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துறையாடப்பட்டது. இவ்வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக ஐம்பது இலட்சம் ரூபாயினை ஒதுக்கியதுடன் எதிர்வரும் நவம்பர் மாதத்துக்குள் இவ் வேலைகளை நிறைவு செய்ய வேண்டும் எனவும் தொழிநுட்ப குழுவினருக்கு கட்டளை பிரப்பித்தார். மட்டக்களப்பு மத்தி வலயத்தின் கட்டிட வேலைகளுக்கான பொறுயியலாளர் முகம்மட் ஹக்கீம் பாடசாலையின் முதல்வர் ஜெசீமா முஸம்மில் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -