அகில இலங்கை சமாதான நீதவானாக திருமதி ரோஹினா மஹரூப்

ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவை சேர்ந்த திருமதி ரோஹினா மஹரூப் இன்று (11) அகில இலங்கை சமாதான நீதவானுக்கான கடிதத்தை சிறிகொத்தாவில் வைத்து பெற்றுக் கொண்டார்.
கிண்ணியாவை பிறப்பிடமாகக் கொண்ட ரோஹினா மஹரூப் சமூக மறுமலர்ச்சிக்கான பெண்கள் அமைப்பின் தலைவியாகவும், சமூக சேவையாளருமாக செயற்பட்டு வருகிறார். முன்னால் கப்பல் துறை இராஜாங்க அமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மர்ஹூம் எம்.ஈ.எச்.எம். மஹ்ரூப் அவர்களின் புதல்வியுமாவார்.
கம்பஹா, களுத்துறை, கொழும்பு போன்ற மாவட்டங்களை சேர்ந்த பெண்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்திகழ்வில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள, மகளிர் , சிறுவர் விவகார அமைச்சர்களான திருமதி.சந்ராணி பண்டார , அனோமா கமகே, மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி கோங்கஹகே, மேல்மாகாண சபை உறுப்பினர் ரோஸ் ஆகியோரும் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். துஷிதா விஜயமான்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -