இன்று ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான புள்ளிகள் வெளியாகியுள்ளன. சில மாணவர்களின் முகங்கள் மகிழ்வுடனும், சில மாணவர்களின் முகங்கள் துன்பத்துடனும் கழியும் நாளாக இதனை காண்கிறேன். மனித வாழ்வின் வெற்றிகளை இவ்வாறான பரீட்சைகள் தீர்மானிப்பதில்லை. இப்பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு மன தைரியத்தினையும், தன் நம்பிக்கையினையும் வழங்குதல் வேண்டும். சித்தியடைந்த மாணவர்களுக்கு மேலும் நகர்வதற்கான வழிகாட்டலை வழங்குதல் வேண்டும். இதற்கான செயற்பாடுகளை பெற்றோர்கள் முன்னெடுப்பது அவசியமாகும்.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களை ஆசிரியர்களோ, பெற்றோர்களோ கண்டித்தல் கூடாது. அவர்களது மனது புண்படும் வகையில் பேசுதல் கூடாது. இதனை விட வாழ்வு பெரியது என்றும், நாம் சாதிக்க வேண்டிய விடயங்கள் ஏராளமாக இருக்கிறது என்றும் அவர்களை உற்சாகப்படுத்துதல் வேண்டும். இப்பரீட்சையில் சித்தியடையாது உயர்ந்த பதவிகளிலும், நேரிய பொறுப்புக்களிலும் பல நூற்றுக்கணக்கான புத்திஜீவிகள் வாழ்கிறார்கள் என்பதினை தெளிவுபடுத்த வேண்டும். 'கற்றது கையளவு கல்லாதது உலகளவு' எனும் வாக்கியத்திற்கு அமைவாக அவர்களை தேற்ற வேண்டும். தோல்வியே வெற்றியின் முதல் படி என்றும்; தோல்வி காணாத எந்த மனிதர்களும் சாதனையாளர்களின் பட்டியலில் சேரவில்லை என்பதினையும் அவர்களுக்கு நினைவுபடுத்தல் வேண்டும்.
அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எதிர்காலக் கல்வி சிறப்பாக அமைந்து வாழ்வில் வெற்றிபெற மனமுவந்து வாழ்த்துகிறேன்.
அதாஉல்லா அகமட் ஸகி
மாநகர முதல்வர்
மாநகர சபை -
அக்கரைப்பற்று
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -