எதிர்வரும் 2018-09-20ஆம் திகதி தொடக்கம் 2018-09-30ஆம் திகதி வரை ஆக்ராவில் நடைபெறவிருக்கும் 46வது ஆசிய 18வயதுக் குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சுற்றுப் போட்டிகளில் மத்தியஸ்தராகக் கடமையாற்றவே இவர் இலங்கைக் குழுவில் இந்தி செல்கின்றார்.
இவர் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் மத்தியஸ்தராகவும்,இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் உதவி தொழில் நுட்ப உத்தியோகத்தராகவும், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தின் உறுப்பினராகவும், மருதமுனை ஈஸ்ரன் யூத் விளையாட்டுக் கழகத்தின் உயர்பீட உறுப்பினராகவும் பதவி வகுக்கின்றார்.
மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயம்,மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி,ஆகியவற்றின் பழைய மாணவரும்,ஊவா தேசிய கல்வியற் கல்லூரியின் ஆங்கில மொழி மூல உடற் கல்வி ஆசிரிய டிப்ளோமா பயிற்ச்சி நெறியைப் பூர்த்தி செய்தவருமாவார்.
தற்போது திருகோணமலை மாவட்ட மூதூர் ஆசாத் நகர் அல்-பலாஹ் வித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியராக் கடமையாற்றும் இவர் மருதமுனையைச் சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் எம்.எல்.எம்.ஜமால்தீன், மிஹ்றுன்னிசா தம்பதியின் புதல்வராவார்.