நல்லிணக்கமன்ற ஒன்றுகூடல்

எம்.என்.எம்.அப்ராஸ்-
ல்முனை பிரதேச நல்லிணக்க மன்றத்தின் ஒன்றுகூடல் நிகழ்வு
அதன் இணைப்பாளர் எஸ்.எல்.அஸீஸ் தலைமையில் இன்று(13)
கல்முனை இக்பால் சனசமுக நிலையத்தில்
இடம்பெற்றது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பாதிகாரி ஏ.எல்.ஏ.வாஹிட் கலந்து கொண்டதுடன், வளவாளர்களாக நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் டி.ராஜேந்திரன், நிகழ்ச்சித் திட்ட ஒருங்கினைப்பாளர்களான எம்.எம்.சமீர் , எம். எஸ். ஜலீல் ஆகியோர் கலந்து கொண்டதுடன், நல்லிணக்க மன்றத்தின் நிர்வாகிகளும்
கலந்து கொண்டனர்.
இதில் குறிப்பாக நல்லிணக்கத்திக்கான எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், அதற்க்கான முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

நிகழ்வின் அங்கமாக கலந்து கொண்ட பிரதம அதிதிக்கு நல்லிணக்க மன்றத்தினால் பொன்னாடை போர்த்தி கெளவிக்கப்பட்டது

இவ்வாறான நல்லிணக்கக் குமுக்களானது அம்பாறை மாவடத்தில் 10 பிரதேச பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -