இலங்கையின் முதன் முதலாவது யுனானி ஆராய்ச்சி வைத்தியசாலை மஞ்சந்தொடுவாயில் திறந்துவைப்பு..

எம்.பஹ்த் ஜுனைட்-
ட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் இயங்கிவந்த ஆயுர்வேத வைத்தியசாலை இலங்கையின் முதன் முதலாவதான யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையமாக தரம் உயர்த்தும் நிகழ்வு 09.09.2018 ஞாயிற்றுக்கிழமை யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர்.ALM.ஜலால்தீன் அவர்களின் தலைமையில் வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையினை திறந்து வைத்ததுடன் சட்டத்தரணி தேசமான்ய மர்ஹூம் MIM.நூர்தீன் ஞாபகார்த்த விஷேட விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி MLAM.ஹிஸ்புழ்ழாஹ் MA.PhD (Mp) அவர்களும் சிறப்பு அதிதிகளாக கொழும்பு பல்கலைக்கழக யுனானி வைத்திய பீடத்தின் தலைவர் வைத்திய கலாநிதி MI.மனூஹா அவர்களும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ULM.நஸ்ரூத்தீன், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் உறுப்பினர்கள், உலமாக்கள், வைத்தியர்கள், கல்விமான்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -