சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட உடங்கா - 2ம் கிராமம் நேற்று இரவுகாட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
நேற்று இரவு சுமார் 12.45 மணியளவில் இக்கிராமத்திற்குள் நுழைந்த கட்டு யானைஒன்றினால் இக் கிராமம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகளும்சேதமடைந்துள்ளதுடன் பெருமளவிலான சேனை பயிர்ச்செய்கையையும்சேதப்படுத்தியுள்ளன.
தாக்குதலுக்கு இலக்கண வீடுகளில் தங்கி இருந்தவர்கள் எதுவித ஆபத்துமின்றிதெய்வாதீனமாக தப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்எம்.ஐ.எம். மன்சூர் நேரில் சென்று பார்வை இடடதுடன் பாதுகாப்பு தொடர்பானநடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தொடர்புகொண்டு இக் கிராமத்தையணைத்தாக்குதலில் இருந்து காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்தார்.
மேலும் பாதிக்கப்ட்ட குடும்பங்களுக்கு நஷ்ட்ட ஈடடை பெற்றுக்கொடுக்கவும்நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக தெரிவித்தார்.
இதன்போது சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிடட பலர் வருகைதந்திருந்தனர்.