ஓகொடபொல யூத் அணியினை 9 விக்கெட்களால் வீழ்த்தி கஹட்டோவிட்ட JF அணி சம்பியன்

கஹட்டோவிட்ட ரிஹ்மி-
கொடபொல யூத் விளையாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு 11 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி 23, 24 ஆகிய தினங்களில் கஹட்டோவிட்ட பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

நேற்றைய தினம் (24) நடைபெற்ற இறுதிப்போட்டியில் கஹட்டோவிட்ட JF A மற்றும் ஓகொடபொல யூத் B அணிகள் மோதின. ஓவருக்கு 4 பந்துகள் வீதம் 4 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யூத் A அணியினர் 3 விக்கெட்களை இழந்து 32 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு ஆடிய JF A அணியினர் ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து 3 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி இலக்கை தாண்டியது. போட்டிக்கு பிரதான அனுசரணையாளராக அத்தனகல்ல பிரதேச சபை வேட்பாளர் பவாஸ் அவர்கள் திகழ்ந்ததுடன், கிண்ணங்களை வழங்கி வைக்கும் நிகழ்விலும் கலந்து சிறப்பித்தார். 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -