அமைச்சர் ஹக்கீமின் முயற்சியினால் கல்முனை மாநகர கழிவுநீர் அகற்றல் திட்டத்திற்கு ரூபா 3400 கோடி ஒதுக்கீடு


மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீமின் முயற்சியினால் கல்முனை மாநகர பிதேசத்தின் கழிவுநீர் அகற்றல் திட்டத்திற்கு கனேடிய அரசு ரூபா 3400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வேலைத் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான முதற் கட்டமாக மக்கள் பிரதிநிதிகள், அரச உயர் அதிகாரிகள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களின் கருத்தறியும் கலந்துரையாடல் கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தலைமயில் இன்று (19) புதன்கிழமை மருதமுனை நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

கழிவுநீர் அகற்றும் வேலைத்திட்டத்தின் திட்ட வரைபு பற்றி நகர திட்டமிடல் தேசிய நீர்வழங்கல் அமைச்சின் பொறியியலளார் குழாம் விளக்கிக் கூறியது.

மேற்கொள்ள இருக்கின்ற கழிவுநீர் அகற்றும் வேலைத்திட்டம் கனேடிய முறையிலான திட்டமாகும்.

கழிவுநீர் அகற்றும் வேலைத்திட்டத்திற்கான திட்ட வரைபு ஜனாதிபதியின் ஊரான பொலன்னறுவை, சுகாதார அமைச்சர் ராஜிதவின் பிரதேசமான வேருவள, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, கல்முனை போன்ற பிரதேசங்களுக்கு வரையப்பட்டுள்ளது.

ஆனால் கல்முனைக்கு மட்டும் அமைச்சர் ஹக்கீமின் முயற்சியினால் கனேடிய அரசாங்கம் இத்திட்டத்திற்கு ரூபா 3400.00 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது என நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் பொறியியலாளர்கள் இதன்போது தெரிவித்தனர்.

இத்திட்டம் மக்களுக்கான திட்டமாகும். இத்திட்டம் வெற்றி பெற அரசியல், இனம், மதம் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என முதல்வர் றக்கீப் வினயமாக கேட்டுக் கொண்டார்.

இத்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பது என கல்முனை மாநகர சபை தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளிட்ட சபையோரால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -