சமாதானமும் சமூகப்பணியும் அமைப்பின் அனுஸரனையுடன் இயக்கி வரும் கல்முனை பிரதேச நல்லிணக்க மன்றத்தினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு (31)கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிரதேசத்தில் உள்ள சமூக மட்ட அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு நடாத்தப்பட்ட இவ் செயலமர்வு கல்முனை பிரதேச நல்லிணக்க மன்ற இணைப்பாளர் எஸ்.எல்.அஸீஸ் தலைமையில் நடைபெற்றது.இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி கலந்து கொண்டதுடன் கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் மற்றும்
சமாதானமும் சமூகப்பணியும் அமைப்பின் இணைப்பாளர் டி .ராஜேந்திரன் மற்றும் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தரான எம்.எம்.சமீர் ,கே.ரோகினி உடப்பட சமுர்த்தி முகாமையாளர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கல்முனை பிரதேச நல்லிணக்க மன்ற நிர்வாகிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.