மாகாணசபைத் தோதல் புதிய முறை பற்றிய சிவில் சமுகமும் பெப்ரல் தலைவா் ரோகன கெட்டியாரச்சி மற்றும் பேராசிரியா் மஞ்சுல கஜநாய்க்க ஆகியோரது இறுதி அறிக்கை மாகாணசபைகள் உள்ளுராட்சி விளையாட்டுத்துறை அமைச்சா் பைசா் முஸ்தாபிடம் கையளி்கப்பட்டது.
இங்கு உரையாற்றி அமைச்சா் பைசா் முஸ்தபா -
சில அரசியல் கட்சிகளின் தலைவா்கள் - இனங்களை இலக்கு வைத்தே அரசியல் செய்யும் இனவாத கட்சிகளே மாகாணசபையின் புதிய தோ்தல்முறைமையை - எதிாக்கின்றனா். நான் உரிய காலத்துக்குள் புதிய முறையை பாராளுமன்றத்திற்குள் சமா்ப்பித்துள்ளேன். ஆனால் அவா்கள் மக்களை நிலைநிறுத்தி மக்களுக்கு நன்மை பயக்கும் தேர்தல் முறையை ஆதரிக்காமல் அவா்கள் பெறிய கட்சிகளின் புட்போட்டில்(கால் மிதி பலகையில்) பயனம் செய்வதற்காகவே சிந்திக்கின்றனா்.
மாகாணசபை முறையில் 9 மாகாணங்களிலும் மாகாணசபை அங்கத்தவா்கள் என்ணிக்கையில் குறைக்கப்படவுமில்லை அதிகரிக்கப்படவுமில்லை. ஆனால் ஒரு கட்சி 50 வீதம் தோ்தல் தொகுதிகளில் வாக்குகளைப் பெறல் வேண்டும். இந்த விருப்பு வாக்குமுறையினால் 3 தசாப்தங்களாக நாம் வீனாக பணம். காலம், செலவலிந்தது. ஒருவா் தோ்தல ்குதிக்க வேண்டுமானால் கட்சிகளின் நோ்முகத்தேர்தலில் முதலில் கேட்கப்படுவது தங்களிடம் பணம் உள்ளதா? அது மட்டுமல்ல கட்சிகளுக்குள்ளே விருப்பு முறையினால் பினக்குகள் எழுகின்றது.
கடந்த. பல தோ்தல்களில் உயிா்களும் காவுகொண்டுள்ளது, கடந்த உள்ளுராட்சித் தோ்தலில்தான் செலவு இல்லாமல் தனது கிராம சேவகா் எல்லைக்குள் நின்று பணசெலவு இல்லாமல் உள்ளுராட்சி உறுப்பிணா்கள் தெரிபு செய்யப்பட்டனா். இம்முறையை கூடுதலான மக்கள் ஆதரித்து வரவேற்றுள்ளனா். இத் தோ்தலில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. ஆனால் அதில் எல்லை நிர்ணய கணிப்பில் சில பினக்குகள் உள்ளன என்பதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.. அத்துடன் உள்ளுராட்சி சபைகளில் அங்கத்தவா்கள் தொகையும் பெருகியுள்ளது.
ஆனால் பெண்களுக்கு 25 வீதம் அரசியல் அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது. ஆகவே மாகாண சபைத் தோ்தலையும் திருத்தம் செய்து புதிய முறையை எதிா்க்கும் சிறுகட்சிகளுக்கு எதிராக சிவில் சமுகமும் , தோ்தல் கண்கானிப்பு இயக்கங்கள் சா்வ மதத் தலைவா்கள் என பலரும் இந்த இனவாத கட்சிகளுக்கு எதிராக கிளா்ந்து எழுந்து தமது எதிா்ப்புக்களை வெளிக்காட்டல் வேண்டும் . எனக் கூறினாா். தற்போதைய கால கட்டத்தில் தத்தமது இனங்களை முன் வைத்து அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் கடந்த தோ்தல் சீர்சிருத்த்தில் பாராளுமன்றத்தில்் வாக்களித்துவிட்டு தற்போது மாகாண சபை தோ்தல் திருத்திற்கு எதிா்க்கின்றனா்.
மாவட்டந்தோறும் விருப்பு முறையையே அவா்கள் விரும்புவதாகவும் பாராளுமன்றத்திலும் கட்சித் தலைவா்கள் கூட்டத்திலும் முன்வைக்கின்றனா். நல்லாட்சியில் தோ்தல்முறைமை சீர்திருத்தி சிறந்த முறையை ஒன்றை அறிமுகப்படுத்துவது என வாக்களிக்கப்பட்டது ஆகவே பாராளுமன்றத்தில் உள்ள 225 பாராளுமன்ற அங்கத்தவா்கள் இது பற்றி சிந்தித்து இந்த நாட்டினதும் மக்களினதும் நன்மை பற்றி சிந்தியுங்கள்.தத்தமது கடசியின் நன்மையை சிந்திக்க வேண்டும். என அமைச்சா் பைசா் முஸ்தபா நேற்று (31)அவரது அமைச்சில் வைத்து பெப்ரல் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியா்ள் குழு மாகாணசபையின் புதிய முறை பற்றிய அறிக்கையை கையேற்றதன் பின்னா் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவா் தெரிவித்தாா்.